Tamil Head - Technology News in Tamil (Computer,Android,Health,etc..) Internet Based Informations

mobile, tips, Computer, blogger, Android, tricks, tamil computer,கம்ப்யூட்டர், பிளாக்கர், Programming Languages, java, php, tamil Android, tamil computer, google, c++, widget 'Welcome To Computer Tips And Tricks, (Computer, Mobile, Android மற்றும் பிளாக்கர் டிப்ஸ்) பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன் Internet Based Informations

  • home
  • about
  • contact
  • Free Recharge Trick
Showing posts with label Tamil Tricks. Show all posts
Showing posts with label Tamil Tricks. Show all posts

FREENAS சர்வர் உருவாக்குவது எப்படி

Posted by Lingaprabu S in: Tamil Tricks

 freenas-logo_no_bgnd200-e547889e7857020d

உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!!
LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது.
அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது OPERATING SYSTEM உங்க கம்ப்யூட்டர் ஐ ஒரு கணினி கட்டமைப்பு சார்த்த சேமிப்பு கருவியாக மாற்றிவிடும்.
உங்க வீட்டுல இரண்டு , மூன்று கணினிகளோ அல்லது மடிக்கணினிகளோ இருந்தால் இந்த FREENAS File Server மிகுந்த பயன்மிக்கதாக இருக்கும்.

  • பொதுவான Firewall
  • பொதுவான BitTorrent Downloader
  • அனைத்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சேமித்து வைத்தல்
  • MP3 பாடல்களை இங்கு மட்டும் வைத்து அனைவரும் கேட்டுக்கொள்ளும் வசதி
  • போன்றவை FREENASஇன்  குறிப்பிடத்தகுந்த பயன்பாடுகள் ஆகும்.

NAS உபயோகிக்க உங்கள் PCல் இருக்கவேண்டியவை:
என்ன தான் பழைய கம்ப்யூட்டரில் இயங்கும் என்றாலும் சற்று தற்காலத்திய கம்ப்யூட்டரில் இதன் சேவை முழுமையாக பெற முடியும்.FREENAS, FREEBSDஐ சார்ந்தது, ஆதலால் FREEBSDஆதரிக்கும் எல்லா HARDWAREலிலும் இது இயங்கும்.
32 BIT மற்றும் 64 BIT CPU ல் இயங்கும் இந்த FREENAS , ஆனால் 64 BIT CPU மிகவும் பொருத்தமானது, ZFS FILE SYSTEM உடன் இயங்க குறைந்தபட்சம் 8 GB RAM தேவைபடுகிறது, உங்களிடம் குறைவான RAM வசதிஅதாவது 2GB RAM இருந்தால் நீங்கள் UFS FILE SYSTEM பயன்படுத்தலாம்….
FREENASஐ CD அல்லது USB ல் நிறுவு செய்வதன் மூலம் COMPUTERன் STORAGE​ஐ ​மிச்ச​ப் படுத்திகொள்ளலாம்.
FREENAS ஐ இங்கு DOWNLOAD செய்யுங்கள்.
http://web.freenas.org/download-freenas-release.html , அதை CD அல்லது USB ல் COPY செய்து உங்கள் COMPUTER ல் BOOT செய்யுங்கள்.
FREENAS INSTALL செய்யும் முறை:
freenas1
உங்கள் COMPUTERல் FREENAS INSTALLERஐ BOOT செய்து பின்வரும் வழிமுறைகளை ஒன்றின் ஒன்று செய்துவாருங்கள்,
  • USB அல்லது CD ஐ உங்கள் COMPUTERல் சொருகுங்கள்,
  • INSTALLATION திறையில் INSTALL/UPGRADE என்று தேர்வுசெய்து, எந்த DRIVEல் சேமிக்க வேண்டும் என தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த DRIVE ல் FREENAS OPERATING SYSTEM சேமிக்கப்படும், INSTALLATION நிறைவடைந்தது, உங்கள் CD மற்றும் USBகு இனி வேலை இல்லை.. அவற்றை நீக்கிவிட்டு உங்கள் COMPUTER ஐ மறு தொடக்கம் செய்யுங்கள்.
freenas2
FREENAS நிறுவுதல்:
COMPUTER மறுதொடக்கம் ஆனவுLடன் கட்டுபாட்டு முனையம் திரை ​
​
​திறக்கும் ​, நீங்கள் இதிலிருந்தும் SETTINGS தேர்வுசெய்யலாம், அல்லது திரையின் அடியில் இருக்கும் URL ல் மற்ற COMPUTER ன் WEB BROWSER ல் இணைந்து FREENAS GRAPHICAL WEB INTERFACE ஐ பயன் படுத்தலாம்.
(இப்பொழுது நீங்கள் MONITOR உடன் இருக்கும் இணைப்பை துண்டித்து விடலாம்)
freenas3
WEB INTERFACEல் பதிவி செய்ய தேவையான PASSWORDஐ FREENAS உடனடியாகத்​தேர்வு  செய்ய​ச்சொல்லும்,நினைவில் நன்கு பதித்து வைத்து கொள்ளும்படியான ​
​கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள்.
freenas4
இப்பொழுது நீங்கள் FREENAS சேவையைத்​தொடங்கும் WEB INTERFACE பார்க்கலாம்,
இது தனிப்பயன் NAS கருவியில் இருப்பது போன்றேயாகும்.
freenas5
அடிப்படை NAS அமைப்பு:
முதலில் நீங்கள் STORAGEஐ அமைக்கவேண்டும், TOOLBAR ல் உள்ள STORAGE ICONஐ கிளிக் செய்தால் STORAGE PANE திரை திறக்கும்,ZFS VOLUME MANAGER பயன்படுத்தி ZFS பிரிக்கலாம் அல்லது UFS VOLUME MANAGER பயன் படுத்தி UFS பிரித்து​ ​க்
கொள்ளுங்கள்
.freenas6
SHARING PANE மூலம் தங்கள் புது தேக்கத்தை உங்கள் வலையமைப்பில் உள்ள மற்ற COMPUTERயுடன் பகிர்ந்து கொள்ளலாம், பலதரப்பான OS பலதரப்பான வரைமுறைகளை ஆதரிக்கும்,
FREENAS உங்களை WINDOWS (CIFS), UNIX/LINUX(NFS) அல்லது APPLE (AFP) பரிமாற்றங்களுக்கு ​ஒத்துழைக்கிறது.
நீங்கள் என்ன PROTOCOL பயன்படுத்தினாலும் ​இந்த தகவல் பரிமாற்றம், பிற தகவல் பரிமாற்றம் போன்றதே.
உதாரணமாக நீங்கள் CIFS SHARE செய்யும் பொழுது தானாக WINDOWS EXPLORER அல்லது FILE EXPLORER வலையமைப்பில் தோன்றிவிடும்.

மேலும் சில ​​சிறப்பம்சங்கள் :
FREENAS பல சேவைகளை வழங்குகிறது , INTERGRATED USER TOOLS மூலம் யார்யாருக்கு எந்தfreenas7 தகவல் ​​பகிரலாம் , அல்லது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ளலாம் FTP,RSYNC,SSH,DYNAMIC DNS போன்ற சேவைகளும் அவற்றில் சில…
PLUGIN SCREEN மிகவும் சுவாரசியமாக உள்ளது , பல மூன்றாந்தரப்பு தொகுப்புகள் இதில் அடங்கும் , நீங்கள் TRANSMISSION BIT TORRENT CLIENT அல்லது PLEX MEDIA SEVER ஐ இங்கு INSTALL செய்து உங்கள் பழைய PCஐ ஒரு BIT TORRENT DOWNLOADER , NETWORK MEDIA SERVER மேலும் NAS ஆக பயன்படுத்தலாம்.

freenas8உங்கள் பழைய COMPUTER ஐ மறுபடியும் உபயோகிக்க FREENAS சிறந்த வழியாகும்.

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

Posted by Lingaprabu S in: Tamil Tricks
டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

உங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்

Posted by Lingaprabu S in: Tamil Tricks
மைக்ரோசாப்ட்  நிறுவனம்  வெளியிட்டுள்ள  “News Pro”   செயலியின் மூலம் ஒருவரது வேலை  சமமந்தப்பட்ட  அன்றாட  செய்திகளை மட்டுமே தொகுத்து மொபைல் அல்லது கணினி திரைக்கு வழங்க  வழி செய்து வருகிறது .
News Pro ஆனது ஆப்பிளின் Flipboard போன்றே உள்ளது.  ஆம்  Flipboard என்பது வெவ்வேறு சமூக ஊடகங்களிலிருந்து  வித்தியாசமான தலைப்புகளில் 12 மொழிகளில்  மென்பொருள்களை பயன்படுத்தி  செய்தியைச் சேகரிக்கும் ஒரு ஊடகமாகும். இதுபோன்ற  செய்தி சேகரிப்பு செயலிகளனைத்தும்  பயனர்களுக்கு ஆர்வம் மிகுந்த   தலைப்புகளினை   தரம் பிரித்து வழங்கி வந்தது. ஆனால் News Pro ஆனது இதிலிருந்து சற்றே வேறுபட்டு  பயனர்களின்  வேலைக்குத் தகுந்த செய்தித் தொகுப்புகளை தரம் பிரித்து வழங்குகிறது.   முதலில் இந்த செயலியை  அணுகும்போது இது உங்களது பேஸ்புக் அல்லது LinkedIn கணக்குடன் ஒருங்கிணைத்து நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டுள்ளீர் மற்றும் பயனர் சம்மந்தப்பட்ட மற்ற பிற விவரங்களையும் அறிந்து அதற்கேற்ற  செய்திகளை வழங்குகிறது. அதன் பின்   “speedy”  ஆப்சனையும் கூடவே வழங்குகிறது. “speedy”  என்பது   ஒரு செய்தியை நீங்கள் படிக்கும்போதும் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை  தவிர்த்து இணையப் பக்கத்தை  வெகு விரைவில்  லோடிங்  செய்து  பார்க்க வழி செய்கிறது.   இது Safariயின் “Reader View”-யில்  ஏற்கனவே  நடைமுறையில் உள்ள நுட்பம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவர் தனது தொழில் சம்மந்தபட்ட செய்திகளை அன்றாடம் பெறுவதால் ஒருவரது  தொழிலில் அது ஒரு படி முன்னேறவும் மற்றும் தொழிலோடு இணைந்த சமூக அறிவையும் வளர்க்கும் விதமாக அமையும்.
 
News Pro வினை பிங் செய்திகள்  தான் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றன. இதன் மூலம் செய்தி தொகுப்புகள் உங்கள் தொழில் துறை சம்மந்தப்பட்ட  பகுதிகளிலிருந்து தரம் பிரித்து வழங்கப்படும்.  மேலும் உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாத விளையாட்டு, சினிமா, அரசியல், பொழுதுபோக்கு போன்ற செய்திகளையும் பெறலாம்.  News Pro ஆனது நமக்கு விருப்ப்பட்ட செய்திகளை விருப்பட்ட தலைப்புகளின்  அடிப்படையில்  உடனுக்குடன்  விளம்பரகளன்றி  பெறலாம். இந்த செயலியை பயனர்களின் கருத்துகணிப்புகளோடு  அடுத்த கட்ட கூடுதல் அம்சங்களையும்  சேர்க்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளன.

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?

Posted by Lingaprabu S in: Tamil Tricks
என்னதான் பேச்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில்  உங்களுடன்  பலர் தொடர்பிலிருந்தாலும் அவர்கள்  யாவரும் உங்கள் உண்மையான நண்பர்கள் இல்லை.பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நண்பர்களில் முக்கால்வாசி பேர் பொய்யானவர்களே!  என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . மனிதவியல் ஆராய்ச்சி நிபுணர்கள்  நடத்திய சமீபத்திய ஆய்வின் படி   பேஸ்புக்கில் நாம் பழகும் நண்பர்கள்  அனைவரும் நேரில் பார்க்காதவர்களே அவர்களில் எத்தனை பேர்  உண்மையான  நண்பர்கள் எத்தனை பேர் உண்மையாகவே ஒரு நண்பருக்காக நினைத்து  கவலைப்படுகிறார்கள் என்ற ஆராய்ச்சியை  நடத்தியது.  சமூக வலைதள  நண்பர்களுக்கும் உண்மையில் நாம் நேரில் பார்த்து பழகும் நண்பர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த கருத்துக் கணிப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது.   பிரிட்டனில் உள்ள  ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில்  கிடைத்த தகவல்களின் படி   பேஸ்புக்கில் இருக்கும் 150  நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள்  அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள்  5 பேர் மட்டுமே!  மற்றும்  உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.
மற்றவை எல்லாம் எதோ ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போலி கணக்குகள்.  இணையத்தில் ஒரு வணிக நிறுவனம் தங்களுக்கு இந்த நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேர் எங்கள் பக்கத்தை லைக் செய்யத் தேவை என ப்ராஜக்ட் கொடுப்பார்கள் அதன் படி இணைய மார்கட்டிங் நிறுவனங்கள் சில பிரத்யோக மென்பொருள் மூலம் ஆயிரகணக்கான ப்ரோபல்களை தினமும் உருவாக்கி அந்த புரொபைல் களுக்கு அதிக நண்பர்களை சேர்ப்பார்கள் அப்படி வரும் நட்பு அழைப்புகள் அமேரிக்கா, ஐரோப்பாவில் அதிகம்.
ஒரு பெண் புரொபைல் படம் வைத்து நட்பு அழைப்பு வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபரின் புரொபைல் படத்தின் இட முகவரியை காப்பி செய்து google image search இல் தேடி அது உண்மையான படமா இல்லை வேறு நபரின் படமா என எளிதில் பார்த்துவிடலாம்​
ஆபாசமாக பேச, பிறரை திட்ட, ஏமாற்ற, கண்காணிக்க என ஒரு நபரே வேறு சில புரொபைல் வைப்பதும் வெகு பரவலாக இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் முதலில் வருவோர் உங்கள் நிகழ் கால நண்பர்கள் மட்டுமே, நிழல்  உலக நண்பர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடுவார்கள் என இந்த ஆய்வு சொல்கிறது.
அனால் இருக்கும் அந்த ஓரிரு உண்மையான நண்பர்களால் தான் சென்னை பெருவெள்ளத்தில் பல நிவாரண / மீட்பு பணிகள் முகநூல்  தமிழ்நாட்டில் நடந்ததை நாம் அறிவோம்.

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

Posted by Lingaprabu S in: Tamil Tricks
கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:





இந்த வீடியோவை பார்த்த பிறகு தேவையில்லாத மற்றும் சமந்தமில்லாத மர்மமான டிரைவ்களை அடிக்கடி கணினியில் போடுவதைத் தவிர்க்கவும். இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது. இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல் நடக்கிறது . USB டிரைவ் மின்சாரமில்லாமல் வேலை செய்ய முடியாது என்பதால் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தடுக்க முடிவதில்லை . USB டிரைவ் ஒரு வளைய மின் சுற்றில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் . இந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் வரையில் சாதனங்கள் உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் மர்மான முறையில் இருக்கும் ட்ரைவ்களை கணினியில் உபயோகப்படுத்துவதை நிறுத்தவும்.
Home
Powered by Blogger.

Search

Free recharge

About Admin

Prabu suyambu

All In All Tech Tricks and Free recharge trick We are The Free recharge trick man Admin Prabu Suyambu For more Go to our Website Freerechargetrickman.blogspot.com

About This Blog

About This Blog tamiltechtricks.blogspot.com is a blog for Tamil Tech Geeks and Bloggers where we share fresh and updated information related to Internet, Social Media, Gadgets, Blogging, How-To Guides, Internet Marketing, SEO and much more related to Technology. You can check out about the admin of the blog here and check out our Sitemap.

Quick Navigation

  • About Us
  • Contact Us
  • Free recharge trick

"© Copyright 2015" · All Rights Reserved · And Our Sitemap · All Logos & Trademark Belongs To Their Respective Owners·
Template Developed By Prabu Suyambu.